Close
Breaking News
Home » பிரதான செய்திகள் » “டீல் வேண்டாம்” – ஊழலுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் இன்று

“டீல் வேண்டாம்” – ஊழலுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் இன்று

protest jm“டீல் வேண்டாம், ஊழலில் ஈடுபட்டோருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்து” எனும் கருப்பொருளில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை இன்று மாலை முன்னெடுக்கவுள்ளதாக ஊழல்களுக்கு எதிரான குரல் எனும் அமைப்பு அறிவித்துள்ளது.

கொழும்பு தொழில்நுட்பக் கல்லூரியின் முன்னால் மாலை 3.00 மணிக்கு ஊர்வலமாக சென்று கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக இவ்வமைப்பின் ஏற்பாட்டாளரும் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வசந்த சமரசிங்க அறிவித்துள்ளார்.

இவ்வார்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கலைஞர்கள், புத்திஜீவிகள் மற்றும் சமயத் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்த செய்தி / ஆக்கத்தை நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
 photo NewFace1_zpsofrogqp4.jpg