Parse error: syntax error, unexpected '<' in /home/onlinece/public_html/wp-content/themes/OnlineCeylon/functions.php(33) : eval()'d code on line 1
மஹிந்த தரப்பின் நால்வர் வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கத் தீர்மானம் | OnlineCeylon
Close
Breaking News
Home » பிரதான செய்திகள் » மஹிந்த தரப்பின் நால்வர் வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கத் தீர்மானம்

மஹிந்த தரப்பின் நால்வர் வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கத் தீர்மானம்

Maithri_mahindaahiமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு விசுவாசமாக செயற்பட்டு வந்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்வரும் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது ஆளும் கட்சிக்கு சார்பாக வாக்களிக்க உள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கத் திர்மானித்துள்ளனர்.

இதில் ஒருவர் மஹிந்தவுடன் எழுவோம் அமைப்பின் முன்னணி செயற்பாட்டாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆளும் கட்சியில் இணைந்து கொள்வது குறித்து இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த சில நாட்களாக, அபிவிருத்தித் தந்திரோபாய அமைச்சர் மலிக் சமரவிக்ரமவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து அமைச்சர் சமரவிக்ரம ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அறிவித்துள்ளார்.

குறித்த நான்கு பேரும் ஆளும் கட்சியில் இணைந்து கொள்வதில் தமக்கு ஆட்சேபனை கிடையாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதில் ஒருவருக்கு அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சுப் பதவி வழங்கப்பட உள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய கட்சிகளுக்கு இடையிலான அமைச்சுப் பகிர்வு கோட்டாவின் அடிப்படையில் அமைச்சுப் பதவி வழங்கப்பட உள்ளது.

ஏனைய ஒருவருக்கு பிரதி அமைச்சர் பதவியும் மற்றுமொருவருக்கு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைமைப் பதவியும் வழங்கப்பட உள்ளது.

அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள முன்னர் இவர்கள் பிரதமர் மற்றும் ஜனாதிபதியை சந்திக்க உள்ளனர்.

இந்த செய்தி / ஆக்கத்தை நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
 photo NewFace1_zpsofrogqp4.jpg