Parse error: syntax error, unexpected '<' in /home/onlinece/public_html/wp-content/themes/OnlineCeylon/functions.php(33) : eval()'d code on line 1
எந்த அடிப்படையில் புலி அமைப்புக்களின் தடை நீக்கம்? படை முகாம்களில் ஐநா குழு விசாரணை?- வீரவன்ச கேள்வி | OnlineCeylon
Close
Breaking News
Home » பிரதான செய்திகள் » எந்த அடிப்படையில் புலி அமைப்புக்களின் தடை நீக்கம்? படை முகாம்களில் ஐநா குழு விசாரணை?- வீரவன்ச கேள்வி

எந்த அடிப்படையில் புலி அமைப்புக்களின் தடை நீக்கம்? படை முகாம்களில் ஐநா குழு விசாரணை?- வீரவன்ச கேள்வி

wimal interview 2.jpgஎந்த அடிப்படையில் புலி அமைப்புகளின் தடைகள் நீக்கப்பட்டன என அரசாங்கம் தெரிவிக்க வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

தேசிய சுதந்திர முன்னணியினால் நேற்று கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகளின் காணாமல்போனோர் தொடர்பில் ஆராயும் குழுவினர் குற்றப் புலனாய்வு பிரிவினருடன் திருகோணமலை கடற்படை முகாம் வளாகத்தினுள் சென்றுள்ளனர். அங்கு சென்று முகாம் பிரதேசத்தினுள் உள்ள பழைய கட்டிடங்களை பரிசோதித்துள்ளனர். அதேபோல் பொதுமக்கள் மீது வன்கொடுமைகள் மற்றும் தாக்குதல் நடந்துள்ளதாக சந்தேகப்படுவதாகவும் அது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். அதேபோல் அப்போதைய காலகட்டத்தில் கடற்படை முகாமில் செயற்பட்ட ஒரு இரண்டு கடற்படை அதிகாரிகளையும் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்துள்ளனர். இவை அனைத்தும் கடந்த ஒருவார காலத்தினுள் நடந்துள்ளது.

இதில் பிரச்சினை என்னவென்றால் எமது நாட்டின் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய பாதுகாப்பு முகாம்களை பரிசோதிக்க சர்வதேச தரப்பினருக்கு எப்போது அனுமதி கிடைத்தது. இதுவரை காலமும் எமது பாதுகாப்பு முமாம்களில் விசாரணைகளை மேற்கொள்ள சரவதேச தரப்பினருக்கு அனுமதி வழங்கப்பட்டதில்லை. அதேபோல் எந்தவொரு நாட்டிலும் அவர்களது பாதுகாப்பு முகாம்களில் ஏனைய நாட்டவரை விசாரணைக்காக அனுமதிக்க மாட்டார்கள். எனினும் இந்த அரசாங்கம் ஜெனிவா மாநாட்டில் ஏற்றுக் கொண்டுள்ள உடன்படிக்கைக்கு அமைய, அதேபோல் கலப்பு நீதிமன்ற முறைமையை உருவாக்க முன்னரே சர்வதேச தரப்பின் விசாரணைகளை ஆரம்பித்து விட்டனர். அதுமட்டுமின்றி விசாரணைக் குழுவின் உட்பிரவேசத்தின் பின்னர் கடற்படையின் சிலரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது மிகவும் பயங்கரமான ஒரு செயற்பாடாகும்.

இலங்கையில் எவ்வாறு அத்துமீறிய விசாரணைகளை மேற்கொள்ள ஐ.நா உறுப்பனர்களுக்கு யார் இவ்வாறு அதிகாரத்தை கொடுத்தது. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதா, குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு யார் அந்த அதிகாரத்தை கொடுத்தது என பல கேள்விகளும் எழுகின்றனர். உள்நாட்டு விசாரணைக் குழுவினருக்கு இலங்கையில் ஏதேனும் விசாரணைகளை மேற்கொள்ள அனுமதிக்க முடியும் ஆனால் சர்வதேச குழுக்களுக்கு யார் இவ்வாறு அனுமதி வழங்கியது. எமது நீதிமன்ற அனுமதி இல்லாது எமது இராணுவ முகாமுக்குள் புகுந்து விசாரணைகளை மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் குழுவுக்கு உள்ள அதிகாரம் என்ன.

புலிகள் செய்த குற்றத்தை கண்டறியாது எமது இராணுவம் என்ன செய்துள்ளது என்பதை ஆராயும் நடவடிக்கைகளே இன்று ஆரம்பமாகியுள்ளது. இன்றுவரையில் மனித உரிமை மீறல் குற்றத்தின் கீழ் இராணுவத்தின் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். விடுதலை புலிகளின் ஆதரவில் செயற்பட்ட, அவர்களின் கைக் கூலிகளாக செயற்பட்ட நபர்களின் கொலை தொடர்பில் எமது இராணுவத்தை தண்டிக்கும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளது. இந்த நாட்டை காப்பாற்றிய எமது இராணுவ வீரர்களை இந்த அரசாங்கம் கவனிக்கும் விதம் எவ்வாறு என்பதை மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவோம், எமது இராணுவத்தின் நலனில் கவனம் செலுத்துவோம் என ஜனாதிபதியும் பிரதமரும் தெரிவித்து வருகின்றார். ஆனால் இரகசியமாக எமது இராணுவவீரர்களை தண்டிக்கும் வேலையினை முன்னெடுத்து வருகின்றனர். தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதாக கூறிக்கொண்டு இலங்கையில் தடைவிதிக்கப்பட்டுள்ள புலம்பெயர் புலி அமைப்புகள் மற்றும் நபர்கள் மீதான தடையை நீக்கும் வர்த்தமானி அறிவித்தலை பாதுகாப்பு செயலாளர் விடுத்துள்ளார்.

தமிழீழத்தை உருவாக்க கடுமையாக போராடும் இந்த அமைப்புகளின் தடையை நீக்கியுள்ளனர். இலங்கையில் யுத்தம் முடிவிற்கு வந்தபின்னர் இலங்கையின் பாதுகாப்பு பலமடைந்த பின்னர் சர்வதேச மட்டத்தில் இருந்து ஈழத்தை உருவாக்கும் பிரபாகரனின் கொள்கையை முன்னெடுத்து சென்ற அமைப்புகள் இவைகள்தான். ஆகவே இந்த தமிழ் அமைப்புகளின் அச்சுறுத்தலை அறிந்தும் அரசாங்கம் இந்த தடையை நீக்கியுள்ளது. ஏன் அவ்வாறான தடை நீக்கத்தை அரசாங்கம் மேற்கொண்டது என்பதை இன்னும் தெளிவுபடுத்தவில்லை. இவர்கள் தமிழீழ கொள்கையை கைவிட்டுள்ளனர் என்று புலனாய்வு தகவல்கள் தெரிவித்துள்ளதா? இவர்கள் மீண்டும் இலங்கையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை சீர்குலைக்க மாட்டார்கள் என்று புலனாய்வு தகவல் கிடைத்துள்ளதா? அல்லது நாட்டை பிரிக்கும் செயற்பாடுகளை கைவிட்டுள்ளனர் என்று தகவல் கிடைத்துள்ளதா. அவ்வாறு எந்தவித தகவல்களும் இல்லாது எவ்வாறு இந்த அமைப்புகளின் தடையை நீக்க முடியும். ஆகவே இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் பூரண விளக்கத்தை முன்வைக்க வேண்டும்

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சர்வதேச தரப்பினருக்கும் புலம்பெயர் அமைப்புகளுக்கும் கொடுத்த வாக்குறுதிகளை இப்போது நடைமுறைப்படுத்துகின்றனர் என்பது தெளிவாகத் தெரிகின்றது. புலம்பெயர் அமைப்புகளின் தடைகளை நீக்கும் அரசாங்கம் எமது இராணுவ வீரர்களை கைதுசெய்து விசாரணை செய்கின்றனர். இது தான் எமது நாட்டின் இன்றைய நிலைமை.

நாட்டை துண்டாடிய புலிகளுக்கு சுதந்திரம் கொடுத்து நாட்டை பாதகாத்த எமது இராணுவ வீரர்களை சிறைவாசம் அனுப்புகின்றனர். பயங்கரவாதிகளை விடுதலை செய்கின்றனர் ஆனால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் எமது இராணுவ வீரர்கள் கைதுசெய்யப்படுகின்றனர். இன்று எமது நாட்டின் நல்லாட்சியின் நிலைமை இவ்வாறு மாறியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தி / ஆக்கத்தை நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
 photo NewFace1_zpsofrogqp4.jpg