Parse error: syntax error, unexpected '<' in /home/onlinece/public_html/wp-content/themes/OnlineCeylon/functions.php(33) : eval()'d code on line 1
பாவனையாளர்களை மட்டுப்படுத்தவே வாகன வரி – நிதி அமைச்சர் | OnlineCeylon
Close
Breaking News
Home » பிரதான செய்திகள் » பாவனையாளர்களை மட்டுப்படுத்தவே வாகன வரி – நிதி அமைச்சர்

பாவனையாளர்களை மட்டுப்படுத்தவே வாகன வரி – நிதி அமைச்சர்

raviநாட்டில் வாகனப் பாவனையாளர்களை மட்டுப்படுத்துவதற்கே தீர்வை வரியை அதிகரிக்கச் செய்தோம் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டின் பாதைகளுக்குப் பொருத்தமான வாகன எண்ணிக்கை காணப்படல் வேண்டும். இலங்கைக்குள் மாத்திரம் தற்பொழுது 69 லட்சம் வாகனங்கள் காணப்படுகின்றன. இதில் அரசாங்கத்துக்கு சொந்தமான வாகனங்கள் 68 ஆயிரம் ஆகும்.

இந்த நாட்டின் தற்போதைய தேவை வாகனங்களை விலைகொடுத்து வாங்குவதல்ல. நாட்டின் பொது மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குவதாகும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட முன்மொழிவில் வாகன இறக்குமதிக்கான தீர்வை வரி அதிகரித்துள்ளது. இதனால், வாகனங்களின் விலையை இன்று முதல் அதிகரிக்க  வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தி / ஆக்கத்தை நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
 photo NewFace1_zpsofrogqp4.jpg