Close
Breaking News
Home » விளையாட்டு » போட்டிகளில் பங்கேற்க இயந்தியா பின்வாங்கல் – மிரட்டும் பாக்கிஸ்தான்

போட்டிகளில் பங்கேற்க இயந்தியா பின்வாங்கல் – மிரட்டும் பாக்கிஸ்தான்

pakistan-indiaஇந்திய அணி எங்களுடன் விளையாடா விட்டால் இந்தியாவில் நடக்கும் டி20 உலகக்கிண்ணத்தை புறக்கணிப்போம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டல் விடுத்துள்ளது.

இந்தியா- பாகிஸ்தான் அணிகள் டிசம்பர்- ஜனவரி மாதங்களில் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க ஒப்பந்தம் செய்தது.

இந்நிலையில் இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் போட்டிகளில் பங்கேற்க முடியாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக அறிவித்தது.

இது தொடர்பான பேச்சு வார்த்தை நடந்து வரும் நிலையில், ஒப்பந்தப்படி இந்திய கிரிக்கெட் அணி எங்களுடன் விளையாட மறுத்தால் இந்தியாவில் நடைபெறவிருக்கும் டி20 உலகக்கிண்ணத்தை நாங்கள் புறக்கணிப்போம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஷகாரியார்கான், “எங்களுடன் கிரிக்கெட் போட்டியை தொடர்வதற்கான வாய்ப்புகளை இந்திய அணி தவிர்த்தால், இது தொடர்பாக பாகிஸ்தான் அரசிடம் அறிவுரை கேட்டு முடிவு எடுப்போம்.

இத்தகைய சூழலில் இந்தியாவில் நடக்கும் டி20 போட்டியில் பங்கேற்க வேண்டாம் என்றே எங்களது அரசு அறிவுறுத்தும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி / ஆக்கத்தை நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
 photo NewFace1_zpsofrogqp4.jpg