Close
Breaking News
Home » பிரதான செய்திகள் » நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் பெயரைப் பயன்படுத்தி பணம் பறிக்கும் கும்பல்

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் பெயரைப் பயன்படுத்தி பணம் பறிக்கும் கும்பல்

black-moneyநுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் பெயரைப் பயன்படுத்தி வர்த்தகர்களிடமிருந்து பணம் பறிக்கும் கும்பலொன்று செயற்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.

மோசடியான வர்த்தகங்களில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கு எதிராக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் விசேட சுற்றிவளைப்புப் பிரிவினர் அண்மைக்காலமாக தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதனைப் பயன்படுத்தி ஒரு கும்பல் வர்த்தகர்களை மிரட்டிப் பணம் பறிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இதன் முதற்கட்டமாக குறிப்பிட்ட வர்த்தகர்களுக்கு எதிராக அவர்களே நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையில் முறைப்பாடுகளை மேற்கொள்கின்றனர். அதன் பின்னர் வர்த்தகர்களைத் தொடர்பு கொண்டு தங்களை நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகளாக இனம் காட்டிக் கொண்டு, குறித்த முறைப்பாட்டின் பேரில் நடவடிக்கை எடுக்காமலிருக்க பெருந்தொகைப் பணத்தை கப்பமாக கோருகின்றனர்.

இவ்வாறான அனைத்து கொடுக்கல் வாங்கல்களும் மொபைல் போன் ஊடான ஈசிகேஷ் முறையிலேயே நடைபெற்று வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

இவ்விவகாரம் குறித்து நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை விசேட விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

இந்த செய்தி / ஆக்கத்தை நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
 photo NewFace1_zpsofrogqp4.jpg