Parse error: syntax error, unexpected '<' in /home/onlinece/public_html/wp-content/themes/OnlineCeylon/functions.php(33) : eval()'d code on line 1
அவன்காட் ஆயுதக்கப்பல் தொடர்பான சோதனைகள் நிறைவு | OnlineCeylon
Close
Breaking News
Home » பிரதான செய்திகள் » அவன்காட் ஆயுதக்கப்பல் தொடர்பான சோதனைகள் நிறைவு

அவன்காட் ஆயுதக்கப்பல் தொடர்பான சோதனைகள் நிறைவு

avant-garde-mahanuwara-shipகாலி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள அவன்காட் கப்பலில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட சோதனைகள் முடிவடைந்துள்ளதாக பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பிரதம பொலிஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித் ராஜபக்ஸ தலைமையிலான குழுவினர் கப்பலிலுள்ள ஆயுதங்கள் குறித்து கடந்த 3 நாட்களாக சோதனைகளை மேற்கொண்டிருந்ததாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா குறிப்பிட்டார்.

கப்பலில் சோதனை நடத்திய குழுவில் 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் அடங்கியிருந்தார்கள்.

அவன்காட் கப்பலில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மற்றும் அவற்றின் ஆவணங்கள், ரக்னா லங்கா நிறுவுனத்துடன் ஆயுதப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளதா போன்ற விடயங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக லெசில் டி சில்வா சுட்டிக்காட்டினார்.

இந்த விசாரணைகள் தொடர்பான இறுதி அறிக்கை எதிர்வரும் சில தினங்களில் தயாரித்து முடிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த செய்தி / ஆக்கத்தை நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
 photo NewFace1_zpsofrogqp4.jpg