Parse error: syntax error, unexpected '<' in /home/onlinece/public_html/wp-content/themes/OnlineCeylon/functions.php(33) : eval()'d code on line 1
ஜீன்ஸ் டி-சர்ட் அணிந்ததால் இளம் மனைவியை கொலை செய்த கணவன் | OnlineCeylon
Close
Breaking News
Home » இந்திய செய்திகள் » ஜீன்ஸ் டி-சர்ட் அணிந்ததால் இளம் மனைவியை கொலை செய்த கணவன்

ஜீன்ஸ் டி-சர்ட் அணிந்ததால் இளம் மனைவியை கொலை செய்த கணவன்

murderஇந்தியா – மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஜீன்ஸ் டி-சர்ட் அணிந்ததற்காக 21 வயது இளம்பெண்ணை அவளது கணவன் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புனே நகர், சுவர்கேட் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் நிஷாத். இவருடைய மனைவி பூஜா. தன்னுடைய மனைவி பூஜா ஜீன்ஸ் டி-சர்ட் அணிவதை ரஞ்சித் விரும்பவில்லை. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றவே, ரஞ்சித் தன்னுடைய மனைவியை கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளார். இந்நிலையில், ரஞ்சித்துடைய வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளதை அடுத்து அருகில் உள்ளவர்கள் நேற்று இதனை காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, மனைவியை கொடூரமாக கொலை செய்த ரஞ்சித் தலைமறைவாகி விட்டார். சுவர்கேட் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.

இந்த செய்தி / ஆக்கத்தை நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
 photo NewFace1_zpsofrogqp4.jpg