Close
Breaking News
Home » விளையாட்டு » பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் பிலால் ஆசிப் பந்து வீச ஐ.சி.சி. அனுமதி

பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் பிலால் ஆசிப் பந்து வீச ஐ.சி.சி. அனுமதி

bilal-asifபாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீபத்தில் ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த தொடரின் 2-வது போட்டியில் பாகிஸ்தான் அணியில் சுழற்பந்து வீச்சாளர் பிலால் ஆசிப் அறிமுகமானார். கடைசி போட்டியில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி பாகிஸ்தான் 2-1 என தொடரை கைப்பற்ற பிலால் ஆசிப் முக்கிய காரணமாக இருந்தார். அவர் 25 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். இந்த போட்டியின்போது அவர் ஐ.சி.சி. விதிமுறைக்கு மாறாக பந்து வீசியதாக புகார் அளிக்கப்பட்டது.

இதனால் அவர் சென்னையில் உள்ள ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் தனது பந்து வீச்சை பரிசோதனைக்கு உட்படுத்தினார். இதன் அறிக்கை ஐ.சி.சி.-க்கு கிடைத்தது.

அதில் பிலால் ஆசிப், ஐ.சி.சி. விதிமுறைக்கு மாறாக பந்து வீசவில்லை என்பது தெரியவந்தது. அதனால் சர்வதேச போட்டியில் ஆசிப் பந்து வீச ஐ.சி.சி. அனுமதி அளித்துள்ளது.

இந்த செய்தி / ஆக்கத்தை நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
 photo NewFace1_zpsofrogqp4.jpg