Close
Breaking News
Home » பிரதேச செய்திகள் » சவளக்கடை, கம்பிக்காலை கிராமத்திலுள்ள காடுகள் மற்றும் புதர்கள் சிரமதான மூலம் துப்புரவு

சவளக்கடை, கம்பிக்காலை கிராமத்திலுள்ள காடுகள் மற்றும் புதர்கள் சிரமதான மூலம் துப்புரவு

(எம்.எம்.ஜபீர்)
சுற்றாடல் பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் கீழ் நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில் கடந்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சவளக்கடை கம்பிக்காலை கிராமத்திலுள்ள காடுகள் மற்றும் புதர்கள் சிரமதான மூலம் இன்று (03) துப்புரவு செய்யப்பட்டது.
நாவிதன்வெளி பிரதேச செயலகம், நாவிதன்வெளி பிரதேச சபை, சவளக்கடை பொலிஸ் நிலையம், நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஆகிய இணைந்து வேலைத்திட்டத்தினை முன்னடுத்தது.
நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.கரன், நாவிதன்வெளி பிரதேச சபை செயலாளர் எம்.இராமக்குட்டி, பிரதேச செயலக, பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசேதகர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு சிரமதானத்தில் ஈடுப்பட்டதுடன் கனரக வாகனங்கள் மூலம் இப்பிரதேசம் துப்புரவு செய்யப்பட்டது.
இப்பிரதேசத்தில் மதுபானசாலை காணப்படுவதினால் பற்றைகள் மற்றும் புதர்கள் அடர்த்தியாக காணப்படுவதன் காரணமாக பல்வேறு குற்றச்செயல்கள் இடம்பெறுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கவனத்தில் கொண்டு அக்குற்றச்செயல்களை குறைக்கும் நோக்கில் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
siramathanamsiramathanam4 siramathanam3 siramathanam2 siramathanam1
இந்த செய்தி / ஆக்கத்தை நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
 photo NewFace1_zpsofrogqp4.jpg